நயன்தாராவின் அடுத்த படத்தில் 11 பாடல்கள்: இசையமைப்பாளர் இவரா?

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

நடிகை நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் 11 பாடல்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே ’அண்ணாத்த’, ‘நெற்றிக்கண்’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது

இந்நிலையில் ’பிரேமம்’ ’நேரம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு ’பாட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படத்தில் 11 பாடல்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்து அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது ஒரு ரொமான்ஸ் படம் என்றும் பகத் பாசில், நயன்தாரா இடையே கெமிஸ்ட்ரி இந்த படத்தின் வெற்றிக்கு உதவும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவின் அடுத்த படத்தில் 11 பாடல்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட 62 வயது நடிகை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் வேற லெவலில் வைரல் ஆனது என்பதும் உலகம் முழுவதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகளும் இயங்கும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 22 முதல் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்ததோடு கூடுதல் தளர்வுகளையும் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கார், நோபல் விருதுகள் கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் நல்லவேளை நான் பிழைத்து விட்டேன் என்றும் எனக்கு பதிலாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாட்டிக் கொண்டார் என்றும் காமெடியாக கூறியிருப்பது

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' அப்டேட் தந்த படக்குழுவினர்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

12 மாம்பழங்களை ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்: காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!

ஒரு மாம்பழம் ரூபாய் பத்தாயிரம் என 12 மாம்பழங்களை 1.20 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அப்படி என்ன அந்த மாம்பழத்தில் ஸ்பெஷல் என்றால் எதுவுமே இல்லை