மூளையில் பொருத்தப்பட்ட சிப்பால் வீடியோ கேம் விளையாடும் குரங்கு! இந்த வளர்ச்சி ஆபத்தாகுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

அமெரிக்காவில் மனித குரங்கு ஒன்று அதன் மூளையில் பொருத்தப்பட்ட சிப்பின் உதவியால் தற்போது வீடியோ கேம் விளையாடி வருகிறது. இதே போன்று கடந்த மாதத்திலும் பன்றி ஒன்றிற்கு மூளையில் சிப் பொருத்தப்பட்டு அதன் உணர்வுகள் கணினி மூலம் கண்காணிக்கப் பட்டது. இத்தகைய வளர்ச்சியைப் பார்த்து உலக விஞ்ஞானிகளே அதிர்ந்து போய் இருக்கின்றனர். காரணம் இது தொழில் நுட்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சான்பிரான்சிஸ்கோவில் நியூராலிங்க் எனும் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் நடத்திவரும் ஆராய்ச்சிகள்தான் தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. அதாவது மனிதன் மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில் நுட்பத்தைக் குறித்து எலான் மஸ்க் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இப்படி மனித மூளையில் இயந்திரத்தை இணைத்து உலகின் அடுத்த கட்ட வளர்ச்சியை இவர் உறுதி செய்து உள்ளார். ஆனால் இந்த வளர்ச்சி என்ன விளைவுகளை கொண்டு வரும் என்றும் சிலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த வளர்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்து இருக்கும் எலான் மஸ்க், நரம்பியல் குறைபாடு உடையவர்கள் தங்களது மூளை மூலம் திறன்பேசிகளை வளர்த்து கொள்ள முடியும். அதோடு அவர்களின் மூளையை இயந்திரத்துடன் இணைத்து மறதிநோய், பார்கின்சன் நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறி உள்ளார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக குரங்கு மற்றும் பன்றிக்கு ஒயர்லெஸ் கருவியை அதன் மூளையில் பொருத்தி அதை இணையத்துடன் இணைத்து ஆய்வு நடந்து வருகிறது. மேலும் இதேபோன்ற தொழில்நுட்பம் மனித Skull லிலும் பொருத்தி இயந்திரத்துடன் இணைக்கும் முயற்சி எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தை அளிக்கும் அளவுக்கு பலம் பெற்றுவிடாதா என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

More News

சிம்பு படத்திற்கு ஏற்பட்ட அதே சிக்கல் தனுஷ் படத்திற்கும்...

சிம்பு படத்திற்கு ஏற்பட்ட அதே சிக்கல் தனுஷ் படத்திற்கு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாலிவுட்டுக்கு செல்லும் தமிழின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

தமிழில் தயாரான பல திரைப்படங்கள் பாலிவுட்டுக்கு சென்று கொண்டிருக்கும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி

நடு இரவில் தானாக ஓடிய பைக்: வைரல் வீடியோ

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்று திடீரென நள்ளிரவில் தானாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

உயிரிழந்த மனைவியுடன் நடனமாடிய கணவர்… சாத்தியமானது எப்படி?

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் ஒன்றுதான் விர்ச்ஷுவல் ரியாலிட்டி.

செய்தி வாசிப்பாளர், நடிகை மீராவின் மகனா இவர்?

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், பாடகி மற்றும் நடிகை மீரா கிருஷ்ணன் மகன், சமீபத்தில் கமல்ஹாசன் படத்தின் பாடல் ஒன்றின் ரீமேக்கை அற்புதமாக வடிவமைத்துள்ளதை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.