எலான் மஸ்க் விரைவில் தமிழ்ப்படம் தயாரிப்பார்.. பிரபலம் கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,July 19 2023]

தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி விரைவில் எலான் மஸ்க் தமிழ் திரைப்படத்தை தயாரிப்பார் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இப்போது இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி பாபு, எலான் மஸ்க் தங்கை நண்பன் என்றும், அந்த வகையில் எலான் மஸ்க் விரைவில் தமிழ் சினிமா தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே தோனி தமிழ் படம் தயாரித்த நிலையில் எலான் மஸ்க் தமிழ் படம் தயாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசியபோது, ‘ இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான மீனாட்சி, ஒரு டாக்டர் என்றும் அவர் தற்போது ஐஏஎஸ் படித்து வருகிறார் என்றும் தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் எனக்கு ரித்திகா மட்டுமே ஜோடி என்றும் ஆனால் அதே நேரத்தில் சொந்த வாழ்க்கையில் அவர் எனக்கு தங்கச்சி மாதிரி என்றும் அவர் தெரிவித்தார். இந்த படம் நன்றாக வந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம் என்றும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆர்யாவுக்கு தனக்கு நன்றி என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

More News

இனிமேல் விவாகரத்து செய்ய மாட்டேன்.. வனிதா விஜயகுமார் பேட்டியால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் இனிமேல் விவாகரத்து செய்ய மாட்டேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

29 வருடத்தில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை.. 48வது வயதில் லிப்கிஸ் காட்சியில் நடித்த பிரபல நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் 29 வருடங்களில் ஒரு முத்த காட்சியில் கூட நடிக்காத நிலையில் இப்போது 48வது வயதில் ஒரு லிப்கிஸ் காட்சியில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக முடிந்த வியாபாராம்.. பக்கா பிளானுடன் 'லியோ' தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின்

சுப்ரமணியபுரம்- பட நடிகை சுவாதி விவாகரத்து செய்கிறாரா? தீயாய் பரவும் தகவல்

சசிக்குமார் இயக்கத்தில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமான

யூடியூப் பார்த்து பல் வலிக்கு வைத்தியம் செய்த இளைஞர்… பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படித்துவந்த இளைஞர் ஒருவர் பல் வலிக்கு வைத்தியம் செய்வதற்காக யூடியூப் பார்த்து அரளி விதைகளை அரைத்துச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம்