'எம்புரான்', 'வீர தீர சூரன்'.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம விருந்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி பிளாட்பாரங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மோகன்லால் நடித்த ’எம்புரான்’ மற்றும் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ உட்பட சில படங்கள் வெளியாகின்றன.
மோகன்லால் நடித்த ’எம்புரான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் இந்த வாரம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.
அதேபோல் விக்ரம் நடித்த ’வீரதீர சூரன்’ திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது.
மேலும் பாரதிராஜா, ரியோ ராஜ், யோகி பாபு நடிப்பில் உருவான ’நிறம் மாறும் உலகில்’ என்ற திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’மேட் ஸ்கொயர்’ என்ற தெலுங்கு திரைப்படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments