close
Choose your channels

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, July 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் நீண்ட நாள் தாமதமான திரைப்படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டே தொடங்கினாலும் இடையில் பல்வேறு பிரச்சனைகளால் படப்பிடிப்பு தாமதமானது. அதேபோல் இந்த படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டபோதிலும் பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் பெற்றதை அடுத்து ரிலீசுக்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்தது. சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் என செய்திகள் வெளிவந்துள்ளது.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.