'எங்கேயும் எப்போதும்' நடிகருக்கு பெண் குழந்தை.. க்யூட் பெயர் வைத்த தம்பதிகள்..!

  • IndiaGlitz, [Thursday,March 07 2024]

'எங்கேயும் எப்போதும்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த நடிகர் ஷர்வானந்த்-க்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் ’காதல்னா சும்மா இல்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஷர்வானந்த் அதன் பிறகு ’நாளை நமதே’ ’எங்கேயும் எப்போதும்’ ’ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்

நடிகர் ஷர்வானந்த் 2023ஆம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்தத் திருமணம் ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரக்ஷிதா ரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ’லீலாதேவி மைனி’ என்று பெயர் வைத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகர் ஷர்வானந்த், ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் ’மனமே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அபிலாஷ் ரெட்டி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா நாயர் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஷர்வானந்த், பைக் ரைடர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

More News

4வது குழந்தைக்கு தாயான உலகப்புகழ் பெற்ற நடிகை.. காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் வாழ்த்து..!

உலகப் புகழ்பெற்ற நடிகை தனக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு தமிழ் நடிகைகளான காஜல் அகர்வால், அக்சரா ஹாசன்  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க வதந்தி.. மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால் பட இயக்குனர்..!

சிம்பு நடிக்க இருந்த 'கொரோ குமார்' என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும்

“எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்பதை யோசியுங்கள்: கமலின் பதிவுக்கு பிரபல இயக்குனரின் பதில்..!

புதுவையில் 9 வயது சிறுமி 6 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இது குறித்து கண்டனம் தெரிவித்து நேற்று கமல்ஹாசன்

ரஜினியால் தான் 'லால் சலாம்' தோல்வி அடைந்ததா? ஐஸ்வர்யா சொல்வது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றும் வசூல் அளவில்

விஜய் சேதுபதி படம் உள்பட 6 படங்கள், 2 வெப் சீரிஸ்.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் தகவல் குறித்து பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் விஜய்சேதுபதி  நடித்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்' உள்பட 6 திரைப்படங்கள் மற்றும் 3 வெப் சீரிஸ்கள்