இன்ஸ்டாகிராமில் வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூ.59 ஆயிரம் இழந்த மாணவர்!

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

நண்பருக்கு வீடியோ அனுப்பியதால் ஒரு மணி நேரத்தில் ரூபாய் 59 ஆயிரம் இழந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் இன்ஸ்டகிரம் வலைத்தளத்தை அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அவருக்கு சமீபத்தில் நண்பரான ஒருபெண், இருவரும் தங்களுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்

இதனால் சபலம் அடைந்த அந்த மாணவர் தன்னுடைய நிர்வாண படம் மற்றும் வீடியோவை அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை பெற்றுக்கொண்ட அந்த பெண், இந்த வீடியோவை உனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் அதை அனுப்பாமல் இருக்க வேண்டுமானால் ரூபாய் 60 ஆயிரம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

தனது நிர்வாண வீடியோ பெற்றோருக்கு சென்றால் சிக்கலாகிவிடும் என்று அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் உடனடியாக ஆன்லைன்செயலி மூலம் ரூபாய் 59 ஆயிரம் அனுப்பியுள்ளார். இருப்பினும் மீண்டும் அதே வீடியோவை வைத்து பயமுறுத்த வாய்ப்புள்ளது என்பதால் இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மிரட்டப்பட்ட அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் உள்ளனர் என்பதும், தங்களுடைய மகன் இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி, கமல் இணைந்தால் யாருக்கு பாதிப்பு: அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும், இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும்

சென்னையில் இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடை: பிரபல நடிகர் திறந்த வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் நாசர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!

ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு??? 

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்?

டெல்லி கலவரம்: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் 

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.