பிச்சைகாரரிடம் கைவரிசையை காட்டிய திருடர்கள்… ரூ.2 லட்சம் கொள்ளை!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

தள்ளாத வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுத்து சேகரித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை முதியவரிடம் இருந்து 4 இளைஞர்கள் திருடிச்சென்ற சம்பவம் தென்காசி அருகே நடைபெற்று இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர் உடல் ஊனம் காரணமாக கடந்த 10 வருடமாக கவனிக்க ஆளின்றி அங்குள்ள கோவில்களில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு மருத்துவச் செலவுகளைக் கவனித்தும் வரும் சண்முகையாக சிறுக சிறுக தான் சேர்த்து வைத்த பணம் ரூ.2 லட்சத்தை மூட்டையாகக் கட்டி தலையில் வைத்து தூங்குவாரம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டீ குடிப்பதற்காக ஒரு கடைக்கு முன்னாள் அந்தப் பையை வைத்துவிட்டு சென்ற நிலையில் திரும்பிவந்து பார்த்தபோது அந்தப் பை காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சியை அடைந்த சண்முகையா அழுது புலம்பியதோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பணமூட்டையை திருடி சென்றதைக் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தல அஜித் - சத்யஜோதி இணையும் திரைப்படத்தின் இயக்குனர் இவரா? கோலிவுட்டில் ஆச்சர்யம்!

தல அஜித் நடித்துவரும் 60வது திரைப்படம் 'வலிமை' என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் தல அஜித்தின் 61-வது திரைப்படத்தையும்

வாத்தி கம்மிங்....இது வார்னர் வெர்சன்.....!இணையத்தில் வைரலாகும் வீடியோ....!

வார்னரின் வாத்தி கம்மிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, விஜய் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பத்தி தெரியாம பேசாதீங்க......! ஷில்பா ஷெட்டி ஆதங்க அறிக்கை...!

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை நிலையை பற்றி அறிந்துகொள்ளாமல்,

விக்ரம்-துருவ் விக்ரம் சென்ற விமானத்தில் திடீர் பிரச்சனை: அதன்பின் என்ன ஆனது?

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துவரும் 'சியான் 60' படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்ற விமானத்தில் திடீரென பிரச்சனை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தாத்தாவின் 85வது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

பிரபல தமிழ், மலையாளம், தெலுங்கு நடிகை ஒருவர் தனது தாத்தாவின் 85ஆவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது