ஜெயலலிதா இறந்த தினத்தில் ராம்மோகன் ராவ் செய்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில் அன்றைய தினம் மறைந்த முதல்வரின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யாமல் தன்னிடம் உள்ள பெருமளவு பணத்தை காப்பாற்றுவதில் தலைமைச்செயலாளர் குறியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா மறைந்த தினத்தில் ராமமோகனராவும், சேகர்ரெட்டியும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த போன் உரையாடலில் பல நூறு கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? என்று ராம மோகனராவும், சேகர்ரெட்டியும் விவாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை உருவான நேரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒரு தலைமை செயலாளர் தனது பணத்தை பதுக்குவது பற்றி பேசி இருப்பது குறித்து தெரிய வந்ததும் தலைமைச்செயலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சேகர்ரெட்டியிடம் பல தடவை ராமமோகனராவ் பேசி இருப்பது எங்களுக்கு தெரிந்தது. அதை ஆய்வு செய்த போதுதான் அவர்களது முறைகேடு உறுதியானது. தொடர்ந்து நாங்கள் சேகர் ரெட்டியின் போனை கண்காணித்தோம். அதன் மூலம் ராமமோகனராவ் தொடர்பு மிக எளிதாக எங்களுக்கு தெரிந்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சோதனை நடவடிக்கையை எடுத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

More News

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் ஆன பெண் ஐஏஎஸ் அதிகாரி

தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் நேற்று விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை...

சமந்தாவின் 'சாவித்திரி' கனவு என்ன ஆயிற்று?

கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா...

விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம். கீர்த்திசுரேஷ்

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ்...

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'காஷ்மோரா' படத்தின் பின்னர் கார்த்தி தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிட'

தலைமை வீட்டை அடுத்து மேலும் ஒரு முக்கிய ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டிலும் அவருடைய மகன் மற்றும் உறவினர்...