close
Choose your channels

இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Monday, August 21, 2017 • தமிழ் Comments

அதிமுகவின் இரு அணிகள் தற்போது இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் ஆளுனர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்பட ஒருசிலர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz