ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்பு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார். கமல்ஹாசனின் கருத்துக்கு ஒருசில அமைச்சர்கள் மரியாதையுடனும் சிலர் ஒருமையிலும் பதில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் இரண்டு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் நேற்று அதிகாரபூர்வமாக இணைந்தன. இந்த இணைப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார். அதில் 'காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும் இணைப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த கருத்து பதிவு செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் யாரும் பதிலளிக்காமல் இருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'போலிக்குல்லாவும் கேலிக்குல்லாவும் போடுபவர்கள் காந்தி குல்லாவையும் காவிக்குல்லாவையும் விமர்சனம் செய்வதா? என்று கூறியுள்ளார்.

More News

பாஜகவில் இணைந்த ரஜினி பட தயாரிப்பாளர்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில வருடங்களாக கோலிவுட் திரையுலகினர் பலர் இணைந்து வருகின்றனர்.

அஜித்துடன் முதல்முறையாக இணைந்த சிவகார்த்திகேயன்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் 'விவேகம்' ஜூரம் பிடித்துள்ளது

இந்த ஆர்வத்தை அரசியலிலும் காட்டியிருக்கலாமே! பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு சின்மயி கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பங்கேற்பாளர்கள் தவறு செய்தால் டுவிட்டரிலும், நேரிலும் கேள்வி கேட்கும் பொதுமக்கள், இதே ஆர்வத்தோடு, தவறு செய்யும் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்டிருந்தால் இந்நேரம் நாடு முன்னேறியிருக்கும் என்று பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா நீக்கம், ஓபிஎஸ் துணை முதல்வர்: அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

அதிமுகவின் இரு அணீகள் இணைந்ததை அடுத்து அடுத்தடுத்து அதிரடி செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் அவர்களுக்கு புதிய பதவி: ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சற்றுமுன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.