கொரோனா வைரஸ் பேசினால் கூட பரவுமா??? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி!!!

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்துளிகள் மூலம் பரவலாம்”, எனவே எச்சரிக்கைக்காக மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும் தன்மையுடையது, பொருட்களின்மீது பல மணிநேரங்கள் தங்கிவாழும் தன்மைக்கொண்டது என அமெரிக்க ஆய்வு நிறுவனமான National Istitutes of Health தனது ஆய்வில் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே, வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள கிருமிநாசினி கொண்ட சானிடைசர், சோப் போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகடாமி கொரோனா வைரஸ் பேசினால் கூட பரவும் தன்மையைக்கொண்டது எனத் தனது ஆய்வுமுடிவை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பேசினாலோ அல்லது சுவாசித்தாலோ அவரிடம் இருந்து வெளியேறும் காற்றின் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுமுடிவை குறித்து ஒருதரப்பினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால் அமெரிக்க தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனம் இதை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஆய்வானது நெபுலைசர் என்ற கருவியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இதில் மிகைப்படுத்தப் பட்ட முடிவுகள் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆய்வு முடிவை உலக சுகாதார நிறுவனம் இப்போது வரை உறுதிசெய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் கடந்த 28 ஆம் தேதி காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவாது, மிக அரிதாகவே சுவாசக் கருவிகள் பொருத்தும்போது இத்தகைய வழக்குகள் பதிவாகியிருக்கின்றன எனத் தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ஃபவுசி “கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர் மட்டுமல்லாது அனைவரும் கட்டாயம் மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளிடம் தொடர்பு கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனத் தற்போது தெரிவித்து இருக்கிறார். அமெரிக்காவில் நேற்று ஒருநாள் மட்டும் 1480 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தெற்காசிய நாடுகளை போலல்லாமல் பல மேற்கத்தியர்கள் மாஸ்க் போடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மக்கள் மாஸ்க் அணிவதை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்காத நிலையில் தற்போது இந்த ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. செய்தியாளர்களை நேற்று சந்தித்த ட்ரம்ப் அமெரிக்காவில் கொரோனா கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு மாஸ்க்கை அணியலாம். ஆனால் அணியவேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

More News

''வடகொரியாவில் கொரோனா தொற்று இல்லை'' உண்மை நிலவரம் என்ன???

கொரோனா தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அலறிக்கொண்டிருக்கும் போது ஒரு நாடு மட்டும் ஏவுகளை சோதனைகளை நிகழ்த்திக்கொண்டு மிகவும் அமைதியாக இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்ன நடக்கும்???

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருக்கும் மின்விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து, இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவர்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வருகிறது.

கொரோனாவை விரட்ட சின்னச்சின்ன விஷயங்களை செய்தால் போதும்: தமன்னா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை

நயன்தாரா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஆர்கே செல்வமணி

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.