ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ்குட்டி உள்ளார்: மோகன்லாலின் ஆச்சரிய டுவீட்!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என்று நடிகர் மோகன்லால் சற்று முன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘த்ரிஷ்யம் 2’. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘த்ரிஷ்யம்; திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனதை அடுத்து ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளியில் கதை அமைந்துள்ளது. சந்தர்ப்பவசத்தால் மகள் செய்த கொலையை கச்சிதமாக மறைத்து தண்டனையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றிய மோகன்லாலுக்கு மீண்டும் அதே கொலை விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலை அவர் எந்தவித பதட்டமும் இன்றி எப்படி சமாளித்தார் என்பதுதான் ’திரிஷ்யம் 2’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு ஜார்ஜ் குட்டி இருக்கிறார் என்றும் நீங்கள் உங்களது ரியல் ஹீரோ குறித்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு ஆச்சரியத்திற்காக காத்திருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'மணி ஹெய்ஸ்ட்' ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி!

உலக அளவில் பிரபலமான வெப்தொடர் 'மணி ஹெய்ஸ்ட்' என்பதும் இந்த வெப்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் என்பதும் தெரிந்தது

இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் விசேஷம்: திரையுலகினர் வாழ்த்து!

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படமான 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது மட்டுமின்றி சர்வதேச அளவில் விருதுகளை வாங்கி குவித்தது. இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில்

19 வயதில்.... ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பதும் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்

இயக்குனர் அகத்தியனின் மூன்று மகள்கள் மற்றும் மருமகன்கள் புகைப்படம் வைரல்!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் என்பது தெரிந்ததே. மூத்த மகள் கனி தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று

அகமதாபாத் மேட்ச் உண்மையில் வேற லெவல்… இப்படி கூற காரணம் என்ன?

அகமதாபாத் மோதேரா மைதானத்தில் நடைபெற்று முடிந்த 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற முன்னணி பெற்று இருக்கிறது.