நீங்கள் பாடகிதானா? வைரலாகும் ஜோனிதாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ!

சமீபகாலமாக இணையதளத்தை ஆட்டிப் படைத்துவரும் “அரபிக்குத்து“ பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில் தனது க்யூட்டான ரியாக்ஷன்களை காட்டி ரசிகர்களிடையே பிரபலமானவர்தான் பாடகி ஜோனிதா காந்தி.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத்துடன் பாடகி ஜோனிதா காந்தியும் இடம்பெற்றிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யார் இவர்? ரியல் ஹீரோயின் பூஜா ஹெக்டேவையே மிஞ்சிவிடுவார் போல என கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து பாடகி ஜோனிதா காந்தியைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகியது. அதோடு இயக்குநர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தயாரிப்பில் உருவாகிவரும் Walking talking strawberry ice cream எனும் திரைப்படத்தில் இவர் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் எனும் தகவலும் வெளியாகி இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ஹீரோயின் அவதாரம் எடுக்க இருக்கும் ஜோனிதா காந்தி தற்போது வெறித்தனமாக வொர்க் அவுட்களை செய்து வருகிறார். அதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி இவர் உண்மையிலேயே பாடகிதானா? என்று ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More News

காலம் எல்லா விஷயத்தையும் வேகவேகமாக மாற்றுகிறது: ஐஸ்வர்யா ரஜினியின் பதிவுக்கு என்ன அர்த்தம்?

காலம் எல்லா விஷயங்களையும் வேகமாக மாற்றுகிறது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு தத்துவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல்

நல்லா இருக்கா? பாவாடை தாவணியில் பளபளக்கும் யாஷிகா ஆனந்த்!

 நடிகை யாஷிகா பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து' நல்லா இருக்கா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

'மாஸ்டர்' பிரபலத்தின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பிரபலத்தின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தல தோனி முதல் சிம்பு, சிவகார்த்திகேயன் வரை பலரையும் கவர்ந்த டீ-ஷர்ட்… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சமீபகாலமாக இந்தியப் பிரபலங்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டீ-ஷர்ட் ஒன்றை அணிந்துகொண்டு வருவதைப் பார்த்த

விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' ரிலீஸ் அறிவிப்பு!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில்