இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்: 2 மில்லியன் டாலருக்கு வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

கலிபோர்னியாவை சேர்ந்த 81 வயது நபர் ஒருவரின் 57 வயது மகன் இறந்து, புதைத்த பின்னர் உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கலிபோர்னியா போலீசார் சமீபத்தில் ஒரு பிணத்தை கண்டறிந்து அந்த பிணத்தில் இருந்த ஆதாரங்களை வைத்து 81 வயது ஃபிராங்க் கெரிகன் என்பவரது மகன் தான் இறந்தவர் என்று முடிவு செய்தனர்.

இறந்த உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டிருந்ததால் அவரது உடலை ஃபிராங்க் குடும்பத்தினர் அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் போலீசார் கொடுத்த ஆதாரங்கள் சாதகமாக இருந்ததால் பிணத்தை பெற்று இறுதி சடங்கு செய்தனர்.

இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட ஃபிராங்க் கெரிகன் மகனை அவருடைய நண்பர் நேரில் பார்த்து, அவர் உயிருடன் இருப்பதாக தகவல் கொடுத்ததோடு, அவரை வீட்டிற்கும் அழைத்து வந்தார். அதன்பின்னர் தான் போலீசார் தவறுதலாக யாரோ ஒருவர் இறந்ததை தனது மகன் இறந்ததாக தவறாக கூறியது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தங்களுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு 2 மில்லியன் டாலர் கேட்டு போலீசார் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

தோனி என் உடன்பிறவா சகோதரர்: பிராவோ நெகிழ்ச்சி

பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது தோனியின் நெருக்கமான நட்பை பெற்றார்...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. கவுதம் கார்த்திக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீமான், சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி வருகின்றனர்...

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

வரும் ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த வரிவிதிப்புக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வரிவிதிப்பால் இளையதலைமுறையினர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ரஜினிகாந்த் ஒரு வெடிக்காத பட்டாசு. சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது...

ஜிஎஸ்டி வரியை யார் கட்டுவது? தயாரிப்பாளர்கள்-விநியோகிஸ்தர்கள் இடையே கருத்துவேறுபாடு

மத்திய அரசு வரும் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்தவுள்ளது. பிராந்திய மொழி படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் திரைப்படங்களுக்கு 28% வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...