நாக்பூர் மைதானத்தில் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடிய தோனி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 48.2 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்துள்ளது. 251 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகின்றது
இந்த நிலையில் இன்றைய போட்டியின்போது திடீரென ஒரு ரசிகர் மைதானத்தில் புகுந்து தோனியிடம் கைகொடுக்க முயன்றார். ஆனால் அந்த ரசிகரை விளையாட்டு காட்ட விரும்பிய தோனி, அவர் தன்னை நெருங்க முடியாத வகையில் இங்குமங்கும் ஓடினார்.
இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவது போன்ற இந்த விளையாட்டை சக வீரர்களும் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கண்டு ரசித்தனர். இறுதியில் அந்த ரசிகரை கட்டிப்பிடிப்பிடித்து அதன்பின் அனுப்பி வைத்தார் இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Dhoni playing with his fan .....?????? #INDvAUS #Dhoni #staraikelungal #CaptainMarvel # pic.twitter.com/JRSYakDBGb
— Dinesh Kumar dishu (@dineshdishu3) March 5, 2019