தல PM...தளபதி CM....! மதுரையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை உண்டாக்கிய ரசிகர்கள்....!

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

நடிகர் விஜய் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் நேற்று இணைய உலகையே ஆட்சி செய்தது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக தல, தளபதி ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தார்கள்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நாயகியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பிரபல இயக்குனர் இயக்குனர் செல்வராகவன் அவர்களும், விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தின் 3-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அதே இடத்தில் தல தோனி நடிக்கும் விளம்பர படத்தையும் காட்சிப்படுத்தவுள்ளனர். இரண்டு படப்பிடிப்புகளும் அருகே நடைபெறுகின்ற காரணத்தால், பீஸ்ட் திரைப்பட தளத்திற்கு விஜயை சந்திக்க தோனி வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தான் நேற்று இணையத்தையே புரட்டிப் போட்டது என்று சொல்லலாம்.

இந்நிலையில் மதுரையைச் சார்ந்த விஜய் ரசிகர்கள் அதை இன்னும் வைரலாக்கும் நோக்கில், அந்த புகைப்படங்கள் வெளியான சிலமணி நேரத்திலே புதிய போஸ்டர் ஒன்றை தயார் செய்து ஒட்டியுள்ளனர். இதை செய்தது மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் தான். தோனி படத்திற்கு பக்கத்தில் PM என்றும், விஜய் படத்திற்கு பக்கத்தில் CM என்றும், ஆளப்போகும் மன்னர்கள் என்று டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டியது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

சிங்காரச்சென்னை 2.0, சுவரொட்டி இல்லா சென்னை: தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த 2021 - 2022 ஆம்

என் கனவு நனவாகிவிட்டது:  சமந்தாவின் சந்தோஷ டுவிட்!

சமந்தா நடித்த படத்தின் படப்பிடிப்பு ஒன்று முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் தான் நடித்ததை அடுத்து தனது சிறுவயது கனவு நனவாகி உள்ளது என்றும் அதை நனவாக்கியவர்

சூரரை போற்று நாயகிக்கு அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப்போற்று' திரைப்படத்தில் நாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி பிரபல நடிகருடன் நடிக்கும் சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

வடிவேலுவுடன் இணைந்து நடித்த பிரபல காமெடி நடிகர் காலமானார்.....!

நடிகர் காளிதாஸ் மாரடைப்பு காரணமாக  நேற்று மாலையளவில் காலமானார்.

பதக்க வீராங்கனையின் கனவை நனவாக்கிய நடிகர் சல்லு பாய்! வைரல் புகைப்படம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர் பளு தூக்கும்