தமிழகத்தை நோக்கி வரும் புயலின் பெயர்: ரெட் அலர்ட் அறிவிப்பு

இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வரும் 29 அல்லது 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபனி என்ற உருது சொல்லுக்கு ஆபத்து அல்லது பயங்கரம் என்பது பொருள். பெயரிலேயே ஆபத்து இருப்பதால் இந்த புயல் பயங்கரமாக இருக்கும் என கருதப்படுகிறது

இந்த புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். சென்னைக்கு 1500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏப்ரல் 27, 28-ஆம் தேதி புயலாக மாறி வடதமிழகத்தில் கரையை கடக்கும் என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

எனவே வரும் 27, 28 ஆகிய தேதிகளில் மிக கனமழை வட தமிழகத்தில் வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

More News

அன்புப்பரிசு அளித்த ரோபோசங்கருக்கு நன்றி தெரிவித்த கோமதி!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட பெப்சி 

தாங்கள் காப்புரிமை பெற்ற ஒரு குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கை பயிர் செய்த குஜராத் விவசாயிகள் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது

'களவாணி 2' படத்தின் தடை குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ஒரு திரைப்படத்தை தயாரிப்பது எந்த அளவுக்கு சிரமமோ அதைவிட சிரமம் அந்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் செய்வது என்பது சமீபகாலத்தில் கோலிவுட் தயாரிப்பாளர்களின் அனுபவமாக உள்ளது.

சென்னைக்கு வெள்ள அபாயமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  தோன்றியுள்ளதால் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் 29ஆம் தேதி சென்னை

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட அழகர்! வைரலாகும் வீடியோ

சாலையில் ஆம்புலன்ஸ் வந்தால் மனிதர்களே சிலசமயம் வழிவிடுவதில்லை. ஆனால் மதுரை கள்ளழகர் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது