பிக்பாஸில் சத்தமில்லாமல் இன்னொரு ஒரு சாதனை… பாராட்டி மகிழும் வாசகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் மீதும் மக்கள் அளவு கடந்த மரியாதையை பொழிந்து வருகின்றனர். காரணம் அவருடைய நாசூக்கான பேச்சு, அதிகாரம் செலுத்தாத இயல்பு என அவர் ஒரு நவீன மனிதருக்கான அடையாளத்துடன் காட்சி அளிக்கிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் ஒருபோதும் நாட்டாமையாக செயல்படாமல் தேர்ந்த ஒரு மனிதராகவே நடந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.

இந்த இயல்புக்கு அடிப்படை காரணம் நடிகர் கமல்ஹாசன் இயல்பிலேயே வாசிக்கும் பண்பைக் கொண்டவர். மேலும் மற்றவர்களையும் வாசிக்கத் தூண்டுவார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் பிக்பாஸ் 3 ஆவது சீசனில் மறைமுகமாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது நடந்து முடிந்த சீசனில் வெளிப்படையாகவே பல இடங்களில் அரசியல் கருத்துகளை அள்ளித் தெளித்து இருந்தார். இதையும் தாண்டி அவர் பிக்பாஸ் 4 ஆவது சீசனில் ஒவ்வொரு நிகழ்ச்சி தொகுப்பின்போதும் ஒரு புத்தகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் அறிமுகப்படுத்திய பெரும்பாலான புத்தகங்கள் தற்போது விற்பனையில் சூடு பிடித்து இருக்கிறது. இதனால் மறுபதிப்புக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவர் கடைசியாக அறிமுகம் செய்து வைத்த எழுத்தாளர் செல்வேந்திரனின் “வாசிப்பது எப்படி ” எனும் புத்தகம் அவர் அறிமுகம் செய்து வைத்த 2 மணி நேரத்தில் இணையதளம் வாயிலாகவும் பதிப்பகத்தின் வாயிலாகவும் கிட்டத்தட்ட 500 பிரதிகள் விற்று இருக்கின்றன. இதனால் புத்தகம் மறுபதிப்புக்கு சென்று இருப்பதாக அப்புத்தகத்தின் பதிப்பகத்தார் டிவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர். பிக்பாஸ் 4 சீசனில் அவர் அறிமுகம் செய்த புத்தகங்களின் பட்டியல்-

1.The Plague – Albert Camus, 2.அவமானம்- சதத் ஹசன் மண்டோ, 3.வெண்முரசு – ஜெயமோகன், 4.புயலிலே ஒரு தோனி – ப.சிங்காரம், 5.அழகர் கோயில் – தொ.பரமசிவன், 6.அடிமையின் காதல்- ரா.கி. ரங்கராஜன், 7.மிர்தாதின் புத்தகம் –Mikhail naimy, 8.கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன், 9.எஸ்தர்- வண்ணநிலவன், 10.தொடுவானம் தேடி – அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ, 11.நாளை மற்றொரு நாளே-ஜி.நாகராஜன், 12.ஜே.ஜே.சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி, 13.கரைந்த நிழல்கள்-அசோகமித்ரன், 13.கூளமாதாரி – பெருமாள் முருகன், 14.நிறங்களின் உலகம் –தேனி சீருடையான், 15.வாசிப்பது எப்படி –செல்வேந்திரன்.

More News

ஆளுயர மாலை, மேளதாளங்கள், பட்டாசுகள்: பிக்பாஸ் ரியோவுக்கு மாஸ் வரவேற்பு

பிக்பாஸ் சீசன் 4 சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலாஜி, சோமசேகர், ரம்யா மற்றும் ரியோ ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதும்

அதுக்கே எனக்கு 7 வருஷம் ஆச்சு: கிண்டல் செய்த ரசிகருக்கு தீனா உருக்கமான பதில்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் விமர்சகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

சூர்யா, கார்த்திக் பட நாயகியின் வெறித்தனமான வொர்க் அவுட்… வைரல் வீடியோ!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீதி சிங். தற்போது பாலிவுட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் “மே டே” படத்தின் படப்பில் கலந்து கொண்டு வருகிறார்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவாரா? தேர்வுக்குழு பட்டியல்!

வரும் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள முதல் இரு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாசமா போகட்டும்: பிரபல இயக்குனரின் விரக்தி பதிவு!

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரக்தியாக பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது