close
Choose your channels

விஜய் பெயரை கேட்டதும் அதிர்ந்த அரங்கம்: கமல் ரியாக்சன் பாருங்க!

Monday, May 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது விஜய் குறித்து பேசியதும் அரங்கமே அதிர்ந்த நிலையில் கமல்ஹாசனின் ரியாக்சன் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது விஜய் குறித்து பேச ஆரம்பித்தார். அப்போதுஅரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இந்த கரகோஷம் நிற்பதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகின. உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொன்ன போதிலும் அரங்கம் அதிரும் அளவுக்கு தொடர்ந்து கரகோஷம் இருந்துகொண்டே இருந்தது. இதனை அடுத்து கமல் கூட்டத்தினரை அமைதியாக இருக்க சொன்னதை அடுத்தே கூட்டம் சில நிமிடங்கள் கழித்து அமைதியானது.

தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மாஸ் இதிலிருந்து தெரிய வருகிறது என ரசிகர்கள் கூறி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos