நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகின்றார்களா? மஞ்சிமா மோகன்

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கவே தியேட்டருக்கு வருகிறார்களா? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் "ரசிகர்கள் நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் கருதினால் அந்த கருத்து முற்றிலும் தவறு. ரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே தியேட்டருக்கு வருகிறார்கள். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இந்த கருத்தை மஞ்சிமா மோகன் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டது ஆகும். சமீபத்தில் கூட இயக்குனர் சுராஜ், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது நடிகைகளின் கவர்ச்சியான அழகை ரசிக்கவே என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்து பின்னர் அதற்கு வருத்தமும் தெரிவித்த நிலையில் மஞ்சிமா மோகனின் இந்த பதில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துடனான மோதலை தவிர்த்த விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தனுஷின் 'வடசென்னை' படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்...

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடி ஆவாரா பிரபல பாலிவுட் நடிகை

இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு மாதம் ஒரு படம் புக் ஆகி கொண்டிருக்கின்றது.

'தளபதி 61' படத்துடன் கனெக்சன் ஆன மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

கோலிவுட் திரையுலகில் இளையதளபதி விஜய் எந்த அளவுக்கு பெரிய நடிகரோ, அதற்கு சமமாக டோலிவுட்டில் மகேஷ்பாபு பெரிய நடிகர். மகேஷ்பாபு நடித்த சில படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார்

தனுஷின் 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ:

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று தனுஷ் அறிவிக்கவுள்ளார் என்று வெளிவந்த தகவலை இன்று காலை பார்த்தோம்...