பாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள் 

  • IndiaGlitz, [Friday,December 04 2020]

தமிழ் திரையுலகில் திறமையாக நடிக்க தெரிந்த மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக பக்கத்து வீட்டு பெண் போன்ற கேரக்டர், வாயாடி பெண் போன்ற கேரக்டரில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் அஞ்சலியை குடும்ப பாங்கான கேரக்டர்களிலும், கலகலப்பான வேடங்களிலும் பார்த்து பழகிய ரசிகர்கள் திடீரென அவரை லெஸ்பியன் கேரக்டரில் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள ’பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள நான்கு கதைகளில் ஒரு கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இதில் அஞ்சலி மற்றும் கல்கி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இருவரும் லெஸ்பியன் கேரக்டரில் நடித்து உள்ளதாக சமீபத்தில் வெளியான டிரைலரில் இருந்து தெரிகிறது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் அஞ்சலி லெஸ்பியன் கேரக்டரில் நடித்ததை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு கதைகளுமே காதல் காரணமாக மகள்களை பெற்றோர்களே ஆணவக்கொலை செய்யும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா? அதிர்ச்சியில் ஆர்மியினர்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்சன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஷிவானி குறைவான ஓட்டுக்களை

ரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும்,

நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா???

அமெரிக்க அதிபராக இருந்துவரும் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்யப் போகிறார்.

தமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி!

தமிழர்கள் அறிவார்ந்த மக்களாக இருந்தாலும் திரைப்பட மோகத்தில் இருக்கும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் அரசியல் குறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய