கனவு இல்லம்: கப்பல் வீடு… அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

இன்றைய சூழலில் எல்லோருக்கும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த விவசாயி ஒருவர் வீடு இருந்தால் மட்டும்போதாது அது கப்பலைப் போன்ற வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்று கடந்த 2010 முதல் போராடி வருகிறார். இவருடைய கனவு இல்லம் அப்பகுதியில் எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் ஹெலெந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 24 பார்கனான் பகுதியில் வசித்து வருபவர் மினட்டு ராய். விவசாயியான இவர் அதே பகுதியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீடு ஒன்றை அமைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் நினைத்திருக்கிறார். இதற்காக இடத்தைத் தேர்வுசெய்த மினட்டு அடுத்து வீடு அமைக்கும் பணிக்காக என்ஜினியர்களை அணுகி தனது திட்டத்தைக் கூறியிருக்கிறார். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை என்று கூறி பலரும் தட்டிக் கழித்திருக்கின்றனர்.

தொடர்ந்து தனது கனவு இல்லம் பற்றிய ஆசையிலிருந்து மின்வாங்காத மினட்டு வீடு கட்டுவதற்காகப் பல முயற்சிகளையும் மேற்கொண்டு கடந்த 2010 இல் வீட்டின் கட்டுமான பணியைத் துவங்கியிருக்கிறார். இடையில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு கட்டுமானப் பணிகள் அவ்வபோது நின்றிருக்கிறது. ஆனால் தடைகளைப் பொருட்படுத்தாத மினட்டு ஒருவழியாக அதையெல்லாம் சமாளித்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கூலி வேலைகாரர்களுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத மினட்டு நேபாளம் சென்று 3 வருடங்கள் அங்கேயே தங்கி கூலி வேலைசெய்து சம்பாதித்து கொண்டுவந்த பணத்தை வைத்து மீண்டும் தனது கனவு இல்லத்தைக் கட்ட ஆரம்பித்து இருக்கிறார். தற்போது முக்கால்வாசி பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த வருடம் தனது கனவு இல்லப் பணிகளை முடித்துவிடுவேன் என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறிவருகிறார் மினட்டு.

கப்பல் மாதிரி வீடு இருக்கு என்று சிலர் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் ஒரு கப்பலையே வீடாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் ஒரு விவசாயி. இதெல்லாம் அளவுக்கு மீறிய ஆசை என்று பலரும் அவருக்கு அறிவுரைகளைக் கூறியிருக்கலாம். ஆனால் மினட்டு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடி அதை சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்.

இதையெல்லாம் விட தனது கனவு இல்லத்தின் மேல் பாகத்தில் ஒரு உணவகத்தையும் அவர் கட்ட இருக்கிறாராம். அப்போதுதான் அதன்மூலம் சம்பாதிக்க முடியும் என்று மினட்டு திட்டம் வகுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் மாதவனுக்கு விருந்து வைத்த சுதா கொங்கரா.. வைரல் புகைப்படங்கள்..!

 நடிகர் மாதவனுக்கு இயக்குனர் சுதா கொங்கரா விருந்து வைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

என்ன ஆச்சு ரோபோ சங்கருக்கு? மகள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில நாட்களாக உடல் மெலிந்து காணப்படுவதாக செய்திகள் வெளியானது என்பதும் அது குறித்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து

சென்னை-ராஜஸ்தான் போட்டி குறித்து சர்ச்சை கருத்து: அஸ்வினுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!

சமீபத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்

நீயும் ஒரு நாள் விமானத்தில் போகலாம்.. சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின்  'விமானம்' புரமோ வீடியோ..!

சமுத்திரகனியுடன் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த 'விமானம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்து சில வாரங்களாக நடைபெற்று வருகிறது

என் மாமியாருக்கு அவர் தான் ஹீரோ.. குஷ்பு சொன்னது யாரை தெரியுமா?

எனது 88 வயது மாமியாருக்கு தல தோனி தான் ஹீரோ என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.