19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை!

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திலால் படேல் எனும் விவசாயி தனது மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக தனது விவசாய நிலத்தின் ஒருபகுதியை விற்று 19 வயது மகளை விமானியாக்கி இருக்கிறார். இதனால் இந்தியாவின் இளம் வயது பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மைத்ரி படேல்.

சூரத் மாவட்டத்தில் உள்ள ஒல்பாட் பகுதியில் வசித்துவருபவர் மைத்ரி படேல். இவர் தன்னுடைய 8 வயதிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். இதற்காகப் பள்ளிப் பருவத்தில் இருந்தே தனது கனவுக்கு உரம்போட்டு கடினமாக உழைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்ட அவருடைய தந்தை காந்திலால் தனது மகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததோடு தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்று அமெரிக்காவில் உள்ள விமான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வைத்துள்ளார்.

இதனால் 19 வயதில் மைத்ரி படேல் விமானியாக மாறியிருக்கிறார். மேலும் இவர் விரைவில் பயணிகள் விமானமான போயிங் விமானத்தை ஓட்டப் பயிற்சிப் பெற்று ஒரு சிறந்த விமானியாக உருவெடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஒரு இந்தியத் தந்தை மகளின் கனவுக்காக நிலத்தை விற்று அமெரிக்காவில் படிக்க வைத்து இருக்கும் இந்தச் சம்பவம் தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில் மைத்ரி படேலும் தனது கனவுக்காக அயராது உழைத்து தனது விமானப் பயிற்சியை முடித்து தற்போது இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ளார். மேலும் குஜராத் முதல்வரான விஜய் ரூபானியை சந்தித்து மைத்ரி படேல் வாழ்த்து பெற்றுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து சோஷியல் மீடியாவில் கருத்துப் பகிர்ந்துகொண்ட விஜய் ரூபானி “இந்தியாவில் ஒரு பெண் 19 வயதில் விமானியாக தொழில்முறை பயிற்சிப் பெற்றுள்ளார். அவர் இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்“ என்று மகிழ்ச்சிப் பொங்க வாழ்த்து தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டரின்மீது ஒரு சில ரசிகர்கள் ரத்தத்தை தெளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

ரெஜினாவின் 'சூர்ப்பனகை': த்ரில் படத்தின் டிரைலர் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்த 'சூர்ப்பனகை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

'அரண்மனை 3' ரிலீஸ் குறித்து குஷ்பு டுவிட்!

சுந்தர்சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'அரண்மனை 3'படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுற்ற நிலையில்

'வலிமை' குறித்து போனிகபூரின் டுவிட் வைரல்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது

கால்பந்தில் கலக்கும் முதல்வர் ஸ்டாலின் பேரன்: எந்த அணியில் இடம்பெற்றார் தெரியுமா?

முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி அவர்களின் வாரிசு முக ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார் என்பதும், முக ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது