ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஃபாஸ்ட் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,April 17 2017]

கடந்த சில வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த ஃ'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஏழு பாகங்களும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் நல்ல வசூலை வாரி குவித்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இந்த படத்தின் எட்டாம் பாகம் வெளியானது.

பால்வாக்கர் இல்லாமல் வெளிவந்துள்ள இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 16 திரையரங்குகளில் 153 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.50,87,450 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.

இந்த படம் கடந்த 12ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை சென்னையில் ரூ.76,29,250 வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த வெள்ளியன்று தமிழில் 3 படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும் இந்த படத்தின் வசூல் குறையவில்லை என்பதே இந்த படத்தின் வெற்றியை புரிந்து கொள்ள முடிகிறது.

More News

'கடம்பன்' ஆர்யாவுக்கு கிடைத்த ஆறுதலான வசூல் செய்தி

நடிகர் ஆர்யா நடித்த படங்களின் வசூல் கடந்த சில ஆண்டுகளாகவே திருப்திகரமாக இல்லாத நிலையில் அவர் மிகவும் ரிஸ்க் எடுத்து, உடலை வருத்தி நடித்த படம் 'கடம்பன்'...

சிவலிங்கா'வின் சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மொட்டசிவா கெட்டசிவா' சுமாரான வசூலையே தந்த நிலையில் கடந்த வெள்ளியன்று அவர் நடித்த மற்றொரு படமான 'சிவலிங்கா' ரிலீஸ் ஆனது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது...

தனுஷின் 'ப.பாண்டி'யின் ஃபவர்புல் சென்னை வசூல்

திரையுலகில் தனுஷ் கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு அவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற துறைகளில் வெற்றி பெற்று தற்போது இயக்குனர் துறையிலும் அவர் பாஸ் ஆகிவிட்டார்...

சீயான் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெடுவது சீயான் விக்ரம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஷங்கரின் 'ஐ' உள்பட பல படங்களின் கேரக்டராகவே அவர் மாறிவிடும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது...

வேலூர் மக்களின் தாகம் தீர்க்கும் தளபதி ரசிகர்கள்

கோடை தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் அதிகளவு வெப்பம் பதிவாகும் வேலூரில் சொல்லவே வேண்டாம். சாலைகளில் உள்ள தார் இளகும் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது...