பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் சூட்டிய தந்தை!!! எப்படி உச்சரிப்பது விழிப்பிதுங்கும் நெட்டிசன்கள்???

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

 

பிரபல SpaceX நிறுவனத்தின் நிர்வாகியான எலோன் மஸ்க் தனக்கும், தனது தோழியும் பிரபல பாடகியுமான கிரையம்ஸ் க்கும் மே 5 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு விசித்திரமான குறியீட்டு பெயரை வைத்திருக்கிறார். குழந்தையின் புகைப்படங்களையும் பெயரையும் தனது டிவிட்டர் பக்கத்தில் எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த குறியீட்டுப் பெயர் தான் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

மிகவும் வேடிக்கையாக பேசக்கூடிய எலோன் மஸ்க் முதலில் கிண்டலுக்காக இந்தப் பதிவை போட்டிருப்பதாக நினைத்த நெட்டிசன்கள் உண்மையில் இது குழந்தையின் பெயர் என அறிந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். எப்படி உச்சரிப்பது என்றும் அவரிடன் சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். நெட்டிசன்களின் சந்தேகத்தை கிரையம்ஸ் தற்போது விளக்கியிருக்கிறார்.

X - பொதுவாக அறியப்படாத பொருளை குறிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு குறியீடு. இந்தக் குறியீடு அவருடைய நிறுவனத்தின் பெயரிலும் இருக்கிறது. Æ – என்பது A மற்றும்  E யின் கலவை. இது ‘ash’ எனவும் கூறப்படுகிறது. லத்தீன் மொழியில் இந்த வார்த்தையைப் பயன்படுத்து கின்றனர். டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளில் இந்த எழுத்து பயன்பாட்டிலும் இருக்கிறது. A-12  - அமெரிக்காவின் முக்கியத் துறையான CIA க்கு வடிவமைக்கப்பட்ட விமானத்தின் பெயர் A-12 . இவையனைத்தையும் இணைத்து X Æ A-12  Musk  என்று குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை எப்படி உச்சரிப்பது என்று கிரைம்ஸ் தெளிவாக குறிப்பிட வில்லை. எனவே இந்த பெயரை எப்படி உச்சரிப்பார்கள் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் விவாதத்தை நடத்தி வருகின்றனர்.  

SpaceX நிறுவனம் விண்வெளித்துறையில் நாசாவுக்கு இணையாக சாதனைகளை குவித்து வரும் ஒரு தனியார் நிறுவனம் ஆகும். பிரபல கோடிஸ்வரரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் செயலாற்றி வருகிறார். கடந்த ஆண்டு இந்நிறுவனம் அனுப்பிய பேட்டரி டெஸ்லா கார் சூரியனை முழுமையாக சுற்றிவந்து சாதனை படைத்தது. மேலும் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பி வெற்றிகரமான ஆய்வை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

 

More News

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள்

கொரோனா ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் அதிகரிக்கிறது!!! WHO அதிர்ச்சி தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசு இதையும் திறக்கமாலாமே! நடிகை கஸ்தூரி

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்கள் காத்திருந்தனர்.

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் அரசின் புதிய அறிவிப்பு என்ன???

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.