ஓபிஎஸ் அணியில் ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர்

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற போட்டியின் காரணமாக சசிகலா அதிமுக, ஓபிஎஸ் அதிமுக என இரண்டு அணிகளாக பிரிந்தன. இப்போதைக்கு சசிகலா அதிமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஓபிஎஸ் அணி தங்களுக்கு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் செல்வாக்கு உள்ளதாக கூறுகிறது.

ஓபிஎஸ் அணியில் தற்போது 11 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு தந்துள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் இந்த அணிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவரும் நடிகையுமான பாத்திமா பாபு இன்று திடீரென ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளாராக இருந்த இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்து கொண்டதால் ஓபிஎஸ் அணிக்கு ஒரு பெண் பேச்சாளர் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு கணவர் விளக்கம்

கடந்த சில நாட்களாக பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளிவந்தன.

அத்தைக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க தயாரா? தீபாவுக்கு நடிகர் ஜீவா கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. நாளொரு திருப்பமும், பொழுதொரு பிரேக்கிங் நியூஸ்களும் வந்து கொண்டிருக்கின்றது.

பிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்

நயன்தாரா நடித்த 'மாயா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் ஆரி. பழனியில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்....

தனுஷின் 'பவர்பாண்டி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது....

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.