close
Choose your channels

இந்தி ரீமேக்கில் “அருவி“ திரைப்படம்… அதிதி பாலன் வேடத்தில் யார் தெரியுமா?

Saturday, March 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் என்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் “அருவி“. இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கி இருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இந்திய அளவிலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் பெரிதும் பாராட்டப் பட்ட இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழ் அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன், தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரைத் தவிர அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி போன்ற அனைத்து நடிகர்களும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் தற்போது இந்தியில் உருவாகும் படத்திலும் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பாலிவுட்டில் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் டங்கல். இப்படத்தில் தனது நடிப்புக்காக பெரிதும் பாராட்டப்பட்ட பாத்திமா சனா ஷேக் இந்தி “அருவி“யில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை இயக்குநர் இ.நிவாஸ் இயக்க இருக்கிறார். அதேபோல அப்லாஸ் என்டர்டெர்ன்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தை ஃபெயித் பிலிம்ஸின் விக்கி ரஜினி இணைந்து தயாரிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்தி “அருவி” கூட்டணி ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இந்தி ரீமேக் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளனர். இதைப் பார்த்த தமிழ் “அருவி“ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.