close
Choose your channels

பிப்ரவரி 28ல் வெளியாகும் மூன்று படங்கள் குறித்த ஒரு பார்வை

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு: கோலிவுட் திரையுலகில் தற்போது நாயகிகள் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் த்ரிஷா முக்கிய வேடத்தில், குறிப்பாக அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு. இந்த படத்தில் த்ரிஷா டாக்டராக நடித்துள்ளதாகவும் மருத்துவத் துறையில் நடந்த ஒரு மிகப் பெரிய ஊழலை த்ரிஷா வெளிப்படுத்தியதால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சிக்கல் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவந்துள்ளது. கே திருஞானம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷாவுடன் நந்தா, ரிச்சர்ட் ரிஷி ,வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆம்ரேஷ் கணேஷ் இசையில் தினேஷ் ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் த்ரிஷாவுக்கு திருப்புமுனையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஜி மோகனின் ‘திரெளபதி: ரிலீஸுக்கு முன்னரே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம். இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என ஒரு சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இருப்பினும் தடைகளை தாண்டி தற்போது இந்த படம் ரிலீசாகிறது ரிலீஸுக்கு முன்னரே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் ரிலீசுக்கு பின்னரும் பரபரப்பை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகிறது. முழுநீள ரொமான்ஸ் திரைப்படமான இந்த படம் ’ஓகே கண்மணி’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மானுக்கு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.