பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கினாரா ஹேமந்த்? கருவை கலைத்ததாகவும் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் இன்னும் மர்ம முடிச்சுகள் விழாத நிலையில் தற்போது மேலும் சில திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று பிரபல தொகுப்பாளினி ஒருவரை சித்ராவின் கணவர் ஹேம்ந்த் கர்ப்பமாக்கியதாவும் அதன் பின்னர் அவர் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நட்சத்திர விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் ஹேமந்த் கொடுத்த டார்ச்சர் காரணமாக தான் சித்ரா தற்கொலை செய்ததாக போலீசார் ஹேமந்தை கைது செய்தனர்

இந்த நிலையில் சித்ராவுக்கு ஏற்கனவே காதலர்கள் இருந்ததாகவும் பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஹேமந்த் தந்தை குற்றஞ்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு சித்ராவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சித்ராவின் தோழிகள் மற்றும் சக நடிகைகள் ஹேமந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பேட்டிகளில் கூறி வந்தனர்

இந்த நிலையில் தற்போது கசிந்து கொண்டிருக்கும் தகவலின்படி பிரபல தொகுப்பாளினி ஒருவருடன் ஹேமந்துக்கு தொடர்பு இருந்ததாகவும் அந்த தொடர்பின் காரணமாக அந்த தொகுப்பாளினி கர்ப்பமடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது