close
Choose your channels

ஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் அதிகப் பதக்கங்களுடன் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால் இந்தியா ஒரே ஒரு வெள்ளி பதக்கத்துடன் 34 ஆவது இடத்தில் இருக்கிறது. 

இந்நிலையில் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு பிரிவில் கலந்து கொண்டு படு தோல்வியடைந்த தமிழக வீராங்கனை பவானி தேவி உருக்கமான ஒரு பதிவை தனது டிவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் “என்னால் முடிந்த அளவுக்கு ஆடினேன். ஆனால் வெற்றிப்பெற இயலவில்லை. மன்னித்து விடுங்கள். ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறும் வகையில் கடுமையாகப் பயிற்சி செய்வேன். நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவு தற்போது இந்திய ரசிகர்களிடையே கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பவானி தேவிக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற இவர் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றிப்பெற்று 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியானா பென் அஸிஸியை தோற்கடித்தார். ஆனால் இரண்டாம் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை ப்ரனெட்டிடம் 7-15 என்ற கணக்கில் அவர் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் இந்தியா சார்பாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சோனுவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காரணம் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீ ஹு ஊக்க மருந்து உட்கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உடல் பரிசோதனை முடிவு பாதகமாக வந்தால் இந்திய வீராங்கனை மீரா பாய் சோனுவிற்கு தங்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Big Day ??
It was Excitement & Emotional.
I won the First Match 15/3 against Nadia Azizi and become the First INDIAN Fencing Player to win a Match at Olympic but 2nd Match I lost 7/15 against world top 3 player Manon Brunet. I did my level best but couldn't win.
I am sorry ?? ???? pic.twitter.com/TNTtw7oLgO

— C A Bhavani Devi (@IamBhavaniDevi) July 26, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.