தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒன்று மட்டுமே இருந்த நிலையில் நேற்று இருவர் பலியானதால் அந்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் ஒருவர் இன்று அதிகாலை பலியானதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது தமிழக மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.