close
Choose your channels

தடைகளை வென்று சென்சார் சான்றிதழ் பெற்ற ராஜூமுருகனின் திரைப்படம்

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்த படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை இயக்குனர் ஏற்கவில்லை. அந்த குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் கதையையே மாற்ற வேண்டியிருக்கும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. அதனையடுத்து டிரிபியூனலுக்கு இந்த படம் சென்றது.

இந்த நிலையில் ஒருவழியாக டிரிபியூனலுக்கு சென்ற இந்த படம் தற்போது ஒருசில ‘கட்’களை பெற்று ‘ஏ’ சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா, நடாஷா சிங், சன்னி வாய்னே, லால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில், ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பாடல் ஒன்றில் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.