தோனி தங்கியிருந்த ஓட்டலில் திடீர் தீ விபத்து. போட்டி ஒத்திவைப்பு

  • IndiaGlitz, [Friday,March 17 2017]

கடந்த சில நாட்களாக விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விளையாடி வருகிறார்.
இந்த போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி டெல்லியில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் தோனியின் ஜார்கண்ட் அணி, பெங்கால் அணியுடன் இன்று மோதவிருந்தது.
இந்த போட்டியில் கலந்து கொள்ள தோனி உள்பட ஜார்கண்ட் அணியினர் நேற்றே டெல்லி வந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் சற்று முன்னர் ஜார்கண்ட் அணியினர் தங்கியிருந்த ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தோனி உள்பட ஜார்கண்ட் அணியினர் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்பட்டுத்தினர்
இந்த தீ விபத்து காரணமாக இன்று நடைபெறவிருந்த போட்டி நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

More News

'பாகுபலி 2' படத்தில் நான்கு கிளைமாக்ஸா? ராஜமெளலி விளக்கம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை புரிந்தது. இதிலிருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம்...

'காற்று வெளியிடை' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...

ராஜமெளலியின் அடுத்த படத்தில் கிராபிக்ஸ் இல்லையா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படங்கள் என்றாலே முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று பிரமாண்டமான செட்கள் மற்றொன்று கிராபிக்ஸ். குறிப்பாக நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன...

உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜித்தின் ஒரே ஒரு ஸ்டில்

தல அஜித் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குறித்த செய்தி வெளியாகி அது மாநில அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. கடந்த ஆண்டு அஜித் நடித்த படம் எதுவும் வரவில்லை என்றாலும் அவர் குறித்த செய்திகள் வெளிவராத நாட்களே இலலை என்று கூறலாம். இந்நிலையில் அஜி

சிம்புவின் அஸ்வின் தாத்தா' டீசர் ரிலீஸ் தேதி

முதன்முதலாக சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்மார்ட் இளைஞன் என மூன்று கேரக்டர்களில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கேரக்டர்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவ