சென்னை சில்க்ஸ்-ஐ அடுத்து மேலும் ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

கடந்த 31ஆம் தேதி சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஏழுமாடி கட்டிடத்தில் திவிபத்து ஏற்பட்டு அந்த கட்டிடம் முழுவதும் எரிந்து சிதிலமடைந்துவிட்டது. தற்போது மீதியுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிடம் எரிந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சென்னை மக்களும் வியாபாரிகளும் மீண்டு வராத நிலையில் சென்னையின் இன்னொரு முக்கிய பகுதியான புரசைவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று மாலை தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

கீழ்தளத்துடன் சேர்த்து 4 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் உள்ள துணிக்கடை ஒன்றில் நேற்று ஏ.சி. மிஷினில் ஏற்பட்ட மின்சாரக்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதனால் அந்த வணிக வளாகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென நான்கு கடைகளுக்கு பரவிவிட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் ஒருசில மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த கட்டிடத்திலும் எந்த விதமான தீத்தடுப்பு வசதிகளும் செய்யப்படவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நகரில் அடுத்தடுத்து தீ விபத்துக்கள் நேரிட்டு வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர்.

More News

'காலா' படத்தில் வரும் 'பீம்ஜியும் சூப்பர் ஸ்டார் தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினி மும்பை டான் கேரக்டரில் நடிக்கின்றார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளது குறித்தும் நாம் அறிந்ததே....

தனுஷின் 'விஐபி 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைத்து துறையிலும் வெற்றி பெற்று வரும் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

பாட்டுத் தலைவன் பாலசுப்பிரமணியம்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், அண்டார்டிகா தவிர உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இசைப்பயணம், என எஸ்பிபியின் சாதனைகள் இந்த 70 வயதிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது. எஸ்பிபி அவர்களின் சாதனை பயணம் இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல, இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள

வாக்குக்கு விருதில்லை, வருகைக்கு தான் விருது: அரவிந்தசாமி

இன்றைய காலகட்டத்தில் பல தனியார் தொலைக்காட்சிகள், இணையதளங்கள், அமைப்புகள் ஆகியவை பல்வேறு விருதுகளை வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன...

'கோபம்' டைட்டில் ஏன்? சீமான் விளக்கம்

பிரபல இயக்குனர் சீமான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி இயக்கவுள்ள திரைப்படம் 'கோபம்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது...