Blood Moon ஆகும் சந்திரன்… எப்போது? வெறும் கண்களால் பார்க்கலாமா?

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

சூரியன்-பூமி-சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய ஒளி நிலவில் படாது. இந்த நிகழ்வை சந்திரக்கிரகணம் என்கிறோம். இந்த ஆண்டின் முதல் சந்திரக் கிரகணம் வரும் மே 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தியாவில் இந்த நிகழ்வை பல முக்கிய இடங்களில் பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி வரும் மே 26 ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2.17 முதல் 7.19 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும் எனவும் இது நீண்ட சந்திரக்கிரகணமாக இருக்கும் எனவும் ஆய்வளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த கிரகணம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கப் போவதால் இதை பிளட் மூன் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தச் சந்திரக் கிரகணத்தின்போது சூரிய ஒளியானது பூமியின் மேல் பட்டு அது சற்று சிதறிய நிலையில் நிலவில் விழும். இதனால் சந்திரன் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் தெரியும். சூரிய ஒளி நிலவில் முழுமையாகத் தெரியாமல் சற்று விலகிய நிலையில் தெரிவதால் இதை பிளட் மூன் என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சந்திரக் கிரகணத்தை சூரிய கிரகணம் போல் அல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்தியாவில் பல பகுதிகளில் இதைப் பார்க்க முடியும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

More News

குடிபோதை...! வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...!

குடிபோதையில் பெண் காவல் ஆய்வாளரை திமுக பிரமுகர் மிரட்டிய சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்!

கொரோனா பேரிடரால் இந்தியாவே நிலைக் குலைந்து போய் இருக்கிறது

நீராவி கொரோனாவை கட்டுப்படுத்துமா? எப்படி செய்ய வேண்டும்? விளக்கும் வீடியோ!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரம் பெற்று இருக்கிறது.

இந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…

கொரோனா நேரத்தில் இளசு முதல் பெருசு வரை செல்போனை வைத்துக் கொண்டே அலைந்து வருகிறோம்.

'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்!

என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது