நம்ம ஊர்லையும் கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா! பகீர் தகவல்!!!

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் அடிக்கடி வெளியிட்டு கடும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது இந்தியாவிலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜுலை 6 ஆம் தேதி இளம்பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை முடிந்து நல்ல உடல் நிலையுடன் கடந்த ஜுலை 24 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதம் அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என வந்தநிலையில் மருத்துவர்களிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு இதுவரை மீண்டும் கொரோனா வந்ததாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது முதல்முறையாக பெங்களூருவில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு அந்நோய்த் தொற்றுகளுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே உடலில் ஒருநோய்க்கான ஆன்டிபாடிகள் இருக்கும்போது மீண்டும் அந்தத் தொற்றுநோய் உடலுக்குள் வருவதை செல்கள் அனுமதிக்காது. செல்களின் நினைவுத்திறனை வைத்து நோய்எதிர்ப்பு சக்தியை சுரந்து நமது உடல் அந்நோயில் இருந்து மீண்டுவிடும் என விஞ்ஞான உலகம் கூறுகிறது.

அப்படித்தான் கொரோனாவின் ஆரம்பக் கட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். முதல் முறையாக தென்கொரியாவில் நூற்றுக் கணக்கான பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறைந்தது 2 மாதம் என்ற அளவிற்கு மட்டுமே ஆன்டிபாடிகளை கொண்டிருக்கிறது. அதற்குப்பின் கொரோனா வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் இருந்து மறைந்து விடுகிறது. இது கொரோனா விஷயத்தில் பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்பட்டது.

தற்போது பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவருக்கு மீண்டும் கொரோனா உறுதிச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருக்கு மீண்டும் வருவது அரிதானது. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஆன்டிபாடி எவ்வளவு இருக்கிறது என்பதை சோதனை செய்துபார்க்க வேண்டும். பெரும்பாலான நபர்கள் சோதனை செய்யாமல் அப்படியே விட்டு விடுகின்றனர் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

மேலும் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் குறைவாக இருக்கும்போதும் இதுபோன்ற சிக்கல் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதைத்தவிர சில நேரங்களில் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடாமல் இருந்தால்கூட மீண்டும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கொரோனா பரிசோதனையில் ஏற்படுகின்ற மாற்றங்களும் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் எனத் தெரிவித்து உள்ளனர்.

More News

ஒரு ஈயை கொல்லப்போய் வீட்டையே கொளுத்திய தாத்தா!!! வைரல் சம்பவம்!!!

பிரான்ஸ் நாட்டில் முதியவர் ஒருவர் ஈயைக் கொல்லுவதற்கு முயற்சி செய்து வீட்டையே கொளுத்திய சம்பவம் கடும் வைரலாகி இருக்கிறது.

தல தோனி பாணியில் ரிட்டயர்மெண்டை அறிவித்த கவின்! வைரலாகும் டுவீட்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் 'தல' என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பிக்பாஸ் 4வது சீசனிலும் சாண்டி: வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் பிக்பாஸ் தமிழ் 4வது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த விஷ்ணுவிஷால்: விரைவில் திருமணமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக

தலைவன் தோனி இருக்க பயமேன்: சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியில் இருந்து விலகியது ஆகியவை