கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் பலி

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்த வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கும் செல்லாமல் வெளிநாட்டவர் தொடர்பும் இல்லாமல் இருந்த மதுரை நபர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வந்த தகவலின்படி மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அவரது உடல் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற தகவல் நேற்று நள்ளிரவு வெளியானது. இதனை சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்

இதனால் கொரோனா வைரஸ்க்கு தமிழகத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது என்பது சோகமான செய்தியாக உள்ளது. இருப்பினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் உடல்நிலை தேறி வருகிறது என்ற செய்தி ஒரு ஆறுதலான செய்தியாகும்