இந்தியாவில் முதல் கொரோனா பலி: உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு

சீனாவில் தொடங்கி உலகில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவரும் கொரோனா வைரஸினால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற 76 வயது முதியவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியாகின.

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி சவுதி அரேபியா சென்ற முகமது உசேன் சித்திக், பிப்ரவரி 23ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு தொடர்ச்சியாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வததால் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அறிந்து கொள்ள அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார். இருப்பினும் அவருக்கு ஆஸ்துமா உள்பட ஒரு சில நோய்கள் இருந்ததால் அவர் கொரோனா வைரசால் தான் இறந்தார் என்பது உறுதிசெய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருடைய மரணம் கொரோனா வைரசால் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் முதன்முதலாக கொரோனாவுக்கு ஒரு உயிர் பலியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 15 வயது சிறுவன்: அதிர்ச்சி தகவல் 

கடலூர் மாவட்டத்தில் திருமணமான 29 வயது பெண்ணை நடுவழியில் மறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினி கூறியது போல் மாற்றம் நிச்சயம் நடக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். குறிப்பாக ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை என்றும்

ரஜினியின் அரசியல் முடிவு: அதிர்ச்சியில் ரசிகர் மாரடைப்பால் மரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான் முதல்வர் பதவியை ஏற்கபோவதில்லை என்றும், கட்சிக்கு மட்டும் தலைமை வகித்து வழிகாட்டியாக இருக்க போவதாகவும் அறிவித்தார்.

இது வேறயா???? கொரோனாவுக்கு மத்தியில் நைஜீரியாவில் பரவிவரும் லாசா காய்ச்சல்!!!

ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில் கொரோனாவை விட அதிக பாதிப்பு கொண்ட லாசா காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்

ஆச்சரியத்தை வரவழைக்கும் சம்யுக்தா வர்மாவின் யோகா ஸ்டில்ஸ்

சரத்குமார், நெப்போலியன் நடித்த 'தென்காசி பட்டணம்' என்ற தமிழ் படத்திலும் ஒருசில மலையாள படத்திலும் நடித்த நடிகை சம்யுக்தா வர்மா, கடந்த 2002ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிஜூமேனன்