நடிகை ரம்பா மகனின் முதல் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,November 07 2018]

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே லான்யா, சாஷா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது. கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரம்பா இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் சினிமா ரசிகர்கள் ரம்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.