'காலா'வின் கதையை லீக் செய்த அமெரிக்க தியேட்டர்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த படம் இதுவரை இல்லாத வகையில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை திரையிடும் அமெரிக்கா திரையரங்குகளில் ஒன்றான 'சினிமார்க்' என்ற திரையரங்கத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் 'காலா' படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சிறுவயதில் மும்பைக்கு செல்லும் காலா, அங்குள்ள தாராவி என்ற ஸ்லம் பகுதியில் டானாக மாறி அப்பகுதி மக்களுக்காக கேங்ஸ்டராக மாறி போராடும் காலா திரைப்படத்தை காண வாருங்கள் என்று டுவீட் செய்துள்ளது.

ஒரு இந்திய திரைப்படத்திற்காக ஒரு அமெரிக்க தியேட்டரின் சமூகக வலைத்தள பக்கத்தில் டுவீட் வெளியாவது இதுதான் முதல்முறை என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்ததால் இந்த பெருமை கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

தேசிய விருதைவிட பெரியது விஜய் பாராட்டு: குப்பை கதை நாயகன்

கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் அனைத்து ஊடகங்களாலும், சமூக வலைத்தள பயனாளிகளாலும் பாராட்டப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்

பிரபல இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் கேங்ஸ்டர் படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

தளபதியுடன் எனது பயணம் தொடங்கியது: பிரபல நடிகையின் டுவீட்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ரஜினியை திடீரென சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே ஒரு நாள் தூத்துகுடி சென்று வந்து அதன் பின்னர் கொடுத்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

வீட்டு வேலை செய்யும் நடிகை

கடந்த சில நாட்களாக பிட்னெஸ் சேலஞ்ச் திரையுலகினர் மத்தியில் புகழ் பெற்று வருகிறது.