பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை.. மிட்வீக் எவிக்சனால் வெளியேறியவர் இவரா?

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிட்வீக் எலிமினேஷன் என்ற புதிய அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதில் ஒரு போட்டியாளர் வெளியேறி விட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் அந்த வார இறுதியில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு மற்றும் நிக்சன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் ஒரு போட்டியாளர் வரும் ஞாயிறு அன்று வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிக் பாஸ் மிட்வீக் எவிக்சன் என்பதை அறிவித்துள்ளார். அதில் நாமினேஷன் செய்யப்பட்ட ஆறு போட்டியாளர்களையும் தயாராக இருக்கச் சொன்ன நிலையில் அதற்கும் ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. அந்த டாஸ்க்கின்படி வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

இந்த நிலையில் மிட்வீக் எவிக்சனாக வெளியேற்றப்பட்டவர் அனன்யா என்று சற்றுமுன் தெரிய வந்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மிட்வீக் எவிக்சன் போக வரும் ஞாயிறு அன்று இன்னொரு போட்டியாளரும் வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. அந்த போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.. விஜயகாந்த் குடும்பத்திற்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்..!

கேப்டன் விஜயகாந்த் இன்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்து கொண்ட நிலையில் அவரால் நிமிர்ந்து உட்கார கூட முடியாமல் அவ்வப்போது சரிந்து கொண்டிருந்தார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்க்க விரும்பிய ஹாலிவுட் நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்..!

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு.. வெள்ள நிவாரண நிதியாக சூரி கொடுத்த தொகை..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் திரையுலக பிரபலங்கள் தாராளமாக வெள்ள நிவாரண நிதி அளித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

தேமுதிக கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர்.. விஜயகாந்த் பதவியில் யார்?

விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கியது முதல் அவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் புதிய பொதுச் செயலாளர்

ஒரே இடத்தில் 'தளபதி 68' 'கங்குவா' படப்பிடிப்பு.. அடுத்தடுத்து ரிலீஸ் ஆக வாய்ப்பு..!

விஜய் நடித்து வரும் 'தளபதி 68' மற்றும் சூர்யா நடித்து வரும் 'கங்குவா' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.