உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்காக உணவு, தங்குமிடம் ஏற்பாடு!

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் படித்து வரும் ஏராளமான இந்திய மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனில் இருந்து வரும் நிலையில் அவர்களை படிப்படியாக மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வருகின்றது என்பதும் இன்று 6வது விமானம் இந்திய மாணவர்களுடன் டெல்லியில் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போலந்து வழியாக இந்தியாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உணவு தங்குமிடம் சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.

உக்ரைனிலிருந்து போலந்து வழியாக இந்தியா செல்லும் மாணவர்களுக்கு விமானங்கள் கிடைக்கும் வரை அந்த இடத்தில் அவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ராகுல் காந்தி எனது தம்பி': முதலமைச்சர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திராவிட முறைப்படி எனது தம்பி என அழைக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார் .

'தளபதி 66' படத்தில் இணையும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தின் ஒளிப்பதிவாளர்!

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் ஒளிப்பதிவாளர் 'தளபதி 66' படத்தின் ஒளிப்பதிவாளராக இணைய வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான பாலாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்ப்ப நேரத்தில் செய்ய வேண்டிய முக்கிய உடற்பயிற்சி: காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய உடற்பயிற்சி குறித்த வீடியோவை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில்

மாலத்தீவில் வலம்வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்