மாஸ் என்ட்ரி கொடுப்பேன். ப்ரியாவின் கடைசி பதிவை பார்த்து கண்ணீரில் நனையும் தோழிகள்!

  • IndiaGlitz, [Tuesday,November 15 2022]

சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்த போது தவறான சிகிச்சை காரணமாக மரணமடைந்தார் என்றும், அதனை அடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ப்ரியாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட உள்ளதாகவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை தர இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பெரும் கனவுடன் கால்பந்து போட்டியில் சாதிக்க வேண்டும் என்று இருந்த ப்ரியாவின் மறைவு அவரது குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரியாவின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

அந்த ஸ்டேட்டஸில் அவர் கூறியிருப்பதாவது: ”ஆல் ஃப்ரெண்டஸ் அண்ட் ஃபேமலி... நான் சீக்கிரமே ரெடி ஆயிட்டு கம் பேக் கொடுப்பேன். அதனால் எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் திரும்ப வருவேனு நம்பிக்கையா இருங்க. லவ் யூ ஃப்ரண்டஸ் அண்ட் ஃபேமலி’ என்று பதிவு செய்துள்ளார். ப்ரியாவின் இந்த கடைசி ஸ்டேட்டஸ்ஸை பார்த்த தோழிகள் கண்ணீர் மழையில் நனைந்துள்ளனர்.

More News

பிக்பாஸ் வீட்டில் ஷிவினின் இரண்டாவது காதல்? இந்த சீசனின் அமீர்-பாவனியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் சக போட்டியாளர் ஒருவரை காதலிப்பதை மறைமுகமாக கூறியுள்ள நிலையில் இந்த சீசனின் அமீர் - பாவனி உருவாக்கிவிட்டார்களா? என்ற

கடைசி படம் மிகப்பெரிய தோல்வி.. நடிப்பதையே நிறுத்தி கொண்ட பிரபல நடிகர்?

பிரபல நடிகரின் நடிப்பில் உருவான திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து சில ஆண்டுகளுக்கு நடிப்பதையே அவர் நிறுத்திக் கொள்ளும் முடிவை

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சாண்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த காஜல் பசுபதி: வரவேற்பு எப்படி இருந்தது தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிற்கு நடிகை காஜல் பசுபதி சென்றிருந்த நிலையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்த புகைப்படங்கள்

நடிகர் கிருஷ்ணா மறைவு: கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி இரங்கல்

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.