close
Choose your channels

வசீகரத் தோற்றம் கொண்ட ரொனால்டோவின் டயட் சீக்ரெட்… 36 வயதில் செம ஃபிட் எப்படி?

Friday, July 2, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஓரமாக வைத்தார். இதனால் ஒரே நாளில் கோக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் சரிந்து அந்நிறுவனத்திற்கு 29 ஆயிரத்து 337 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படி உடல் நலத்தின் மீது அதிக அக்கறைக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செய்கையைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் 36 வயதில் இந்த மனிதன் எப்படி இவ்ளோ ஃபிட்டாக இருக்கிறார். என்ன டயட் ஃபாலோ பண்ணுகிறார் என்பதைத் தேடத் தொடங்கிவிட்டனர். கூடவே அவர் “தண்ணீரைக் குடியுங்கள்” எனக் கூறியதற்கு என்ன காரணம் எனவும் தேட ஆரம்பித்து விட்டனர்

36 வயதாகும் கிறிஸ்டியானோ உடல் நலத்தில் மட்டுமல்ல, மனநலத்திலும் அதிக அக்கறைக் கொண்டவர். அவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை ஒதுக்கக்கூடிய பழக்கம் அவருக்கு உண்டு. மேலும் இவருடைய உணவுப் பழக்கத்தை அவரது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய குழந்தைகள் 4 பேருமே சாக்லேட், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

தனது அப்பா குடிகாரத் தந்தையாக இருந்து கடைசியில் உடல்நலம் குன்றி உயிரை விட்டதால், கிறிஸ்டியானோ இன்றுவரை மதுவை கையால் தொட்டதில்லையாம். கூடவே புகைப்பழக்கமும் அவருக்குக் கிடையாது.

மேலைநாடுகளில் உள்ள பல இளம் வீரர்கள் டேட்டூ குத்திக் கொள்வதை பேஷனாக வைத்திருக்கும்போது ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதுவரை தன்னுடைய உடலில் ஒருமுறை கூட ரொனால்டோ பச்சைக் குத்திக் கொண்டதில்லையாம்.

ரொனால்டோவின் வசீகரத் தோற்றத்திற்கு காரணம் அவர் உடற்பயிற்சிதான். அதை ஒரு அதீத ஆர்வத்துடன் செய்வது வருகிறார். உடற்பயிற்சி செய்ய அவர் ஒருநாளும் தவறுவதில்லை. மேலும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். கூடவே ஜுனியர் ரொனால்டோவும் அவ்வபோது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமே தங்களுடைய வீட்டை ஒரு குட்டி ஜிம்மைப் போலத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இடையில் ஓடிவரும் குழந்தைகளையும் ரொனால்டோ ஒரு கருவியைப் போல தூக்கிச் சுமந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார். கூடவே நீச்சல் பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சியையும் அவர் தொடர்ந்து செய்துவருகிறார்.

இதைத்தவிர அவருடைய சீக்ரெட் என்றால் ரொனால்டோ நம்மைப்போல ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தூங்குவதில்லை. அதற்குப் பதிலாக தினமும் 5 முறை 90 நிமிடங்கள் என்ற அளவில் குட்டி குட்டியாகத் தூங்குகிறார். இதனால் உடலில் ஏற்படும் களைப்பை அப்போதே போக்கிக் கொள்கிறார். அதோடு இரவு சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுந்து விடுவதால் அவருடைய தசை புத்துணர்ச்சியாக இருப்பதை உணருகிறாராம்.

மேலும் கால்பந்துமீது அதீதக் காதல் கொண்ட ரொனால்டோ வாரத்தில் 5 நாட்கள் 3-4 மணிநேரம் வரை கால்பந்து பயிற்சியை தவறாமல் மோற்கொள்கிறார். இதனால் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தோடு முன்னணி வீரர்களின் சாதனையையும் தொடர்ந்து முறியடித்து வருகிறார்.

ரொனால்டோவின் உணவுப்பழக்கம் மிகவும் வித்தியாசமானது. தவறிக்கூட கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட் அடைக்கப்பட்ட உணவுகளை அவர் எடுத்துக் கொள்வதில்லை. கார்போஹைட்ரேட் கொண்ட குளிர்பானங்களையும் அவர் தவிர்த்து விடுகிறார்.

இதனால் மீன் அவருடைய உணவில் பிரதான இடம் பிடித்து விடுகிறது. அதுவும் மயில் மீன் (Swordfish), கொடுவா(Sea Bass), விலை மீன்(Sea Bream) எனும் 3 வகை மீன்களையும் விரும்பி சாப்பிடுகிறார்.

சிக்கன், பிராக்கோலி மற்றும் புரத உணவுகளையே அவர் அதிகம் எடுத்துக் கொள்வாராம். கொழுப்பு அடங்கிய உணவுகளை அவர் தவிர்த்து விடுகிறார். இதனால் 36 வயதிலும் அவருடைய உடலில் வெறும் 7% தான் கொழுப்பு இருக்கிறதாம். 50% வெறும் தசைகள்தான் அவருடைய உடலில் இருக்கிறது என்பதால் வசீகரத்துடன் எப்போதும் 20 வயதுடைய இளைஞனைப் போலவே காட்சி அளிக்கிறார்.

தினமும் 3 முறை சாப்பிடும் பழக்கமும் அவருக்கு கிடையாது. உணவுகளை நான்கு மணிநேர இடைவேளையில் ஆறுவேளை உண்டு சராசரியாக 3,200 கலோரிகளை எடுத்துக் கொள்கிறார். இதனால் அதிகபடியான கொழுப்பை தவிர்க்க முடிகிறது.

சோடா அடங்கிய குளிர்பானங்களை முற்றிலும் தவிர்த்து தண்ணீரை அதிகமாக அருந்துகிறார். இதனால் தன் உடலில் நீர் அளவினை சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் பாஸ்தா, காபி, முட்டையின் வெள்ளைக் கரு, கொழுப்பு நீக்கிய தயிர், வெண்ணெய், முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களை முக்கிய உணவாக எடுததுக் கொள்கிறார். இதனால் கொழுப்பு உணவுக்கு வேலையே இல்லாமல் போகிறது.

ரொனால்டோவின் உணவில் சர்க்கரை அளவு அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வொர்க் அவுட், நல்ல உணவு புரதச் சத்து, அளவான தூக்கம், குடும்பத்தினருடன் எல்லையில்லா மகிழ்ச்சி, கூடிவே தனது லட்சியத்தில் தளராத மனநலம், அதற்குத் தேவையான ஓயாத உழைப்பை கொண்டு இருக்கும் ரொனால்டோ 36 வயதிலும் செம ஃபிட்டாக காட்சி அளிக்கிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அறிமுகமானபோது ரொனால்டோ ஒல்லியான தேகத்துடன் காட்சியளித்தார். ஆனால் தற்போது உலகின் தலைசிறந்த வீரர் என்பதோடு பல வீரர்களுக்கும் கனவு நாயகனாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் அவருடைய உணவுப் பழக்கமும் மிக நேர்த்தியான ஒன்றாக இருக்கிறது.

ரொனால்டோவின் உடை, கால்பந்து முறை, வொர்க் அவுட் எல்லாம் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது போலவே அவருடைய உணவுப்பழக்கமும் மற்றவர்களுக்கு நல்ல ஒரு உதாரணமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.