சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஓபிஎஸ் திட்டவட்டம்

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

நேற்று மாலை முதல் இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணையவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஓபிஎஸ் அணியினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேலும் ஓபிஎஸ் அணி தரப்பிலும் அதிமுகவை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது. இந்நிலையில் சற்றுமுன் திடீரென இணைப்பிற்கு ஓபிஎஸ் ஒருசில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

எந்த ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும் அதிமுக சென்று விடக்கூடாது என்றும் சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடைபெறும் என்ற எங்களின் அடிப்படை கொள்கையை மாற்ற மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அவர்களின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அதிமுக அம்மா அணியினர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினிக்கு அரசியல் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்....

ஸ்பாட் எடிட்டிங் செய்ய பெல்கிரெட் செல்கிறார் 'விவேகம்' எடிட்டர். மே 1-ல் டீசர் உறுதி

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது.

தினகரன் வாய்தான் அவருக்கு எதிரி. நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஆனந்த்ராஜ் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி சசிகலா அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்

வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்டாரா? புகைப்பட வைரலால் பரபரப்பு

கோலிவுட் திரையுலகில் தைரியமான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் நடிகை பாவனா கடத்தல் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனக்கு ஏற்பட்ட ஒரு பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தையும் வெளியே கொண்டு வந்தார். மேலும் 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் மூலம் திரையுலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்புக்கும் வழி

ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் அரசியல் ஆலோசனை செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.