சுபஶ்ரீ விவகாரத்தில் விஜய் விளம்பரம் தேடுகிறார்: முன்னாள் பெண் அமைச்சர் 

  • IndiaGlitz, [Friday,September 20 2019]

நேற்று நடைபெற்ற ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘பேனர் விழுந்ததுல சுபஶ்ரீங்கற ஒரு சகோதரி உயிரிழந்துட்டாங்க. இதுக்கு யார் காரணமோ, அவங்களை விட்டுட்டு, லாரி டிரைவரைக் கைது பண்றாங்க. பேனர் பிரின்ட் பண்ண பிரின்டர்ஸ்க்கு சீல் வைக்குறாங்க. சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரை ஏன் கைதுசெய்ய முடியல? சட்டம் நியாயத்தைச் செய்யணும்’ என்று பேசினார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு நிச்சயம் ஆளுங்கட்சி தரப்பினர்களிடம் இருந்து விமர்சனம் வரும் என்று எதிர்பார்த்ததே. ஏற்கனவே அதிமுகவின் வைகைச்செல்வன், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் இதுகுறித்து கூறியதாவ்து:

தங்கள் படம் வெளியாகும் போதெல்லாம், சர்ச்சையாகப் பேசி விளம்பரம் தேடுவது நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சுபஶ்ரீ இறந்தது அனைவருக்கும் வருத்தமான விஷயம். சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஆளுங்கட்சியை விமர்சித்தால் விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்பதால் நடிகர் விஜய் இவ்விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளைப் பேசுகிறார்.

இதே பேனரை எதிர்க்கட்சியினர் வைத்திருந்து, விபத்து நேர்ந்திருந்தால், விஜய் இப்படிப் பேசியிருப்பாரா? ஆளுங்கட்சியை விமர்சிப்பதன் மூலம் தன் படத்துக்கு விஜய் விளம்பரம் தேடிக்,கொள்கிறார். இதில் அரசியல் செய்வது நல்லதல்ல” என்று தெரிவித்தார்.
 

More News

காமெடி நடிகர் சதீஷ் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு இன்று நிச்சயதார்த்தம் ஆனதாக இணையதளங்களில் வெளிவந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நான் எதையும் சீக்கிரம் கத்துக்குவேன்: 'சங்கத்தமிழன்' டிரைலர் 

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும்

'தல' மனைவி டுவீட்டுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்த முதலமைச்சர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் மனைவி சாக்சி டுவிட்டரில் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளது

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த 'மாநாடு' என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தார்.

விஜய் கருத்தை பெரிதாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் மத்திய அமைச்சர்

பேனர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பாஜக பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.