ரஜினியை திடீரென சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. அரசியல் ஆலோசனையா?

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தார்.

அந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை வரும் வழியில் சில அரசியல் தலைவர்களை சந்தித்தார் என்பதும் அவர்களில் ஒருவர் உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்பதும் தெரிந்ததே.

மேலும் ரஜினிகாந்த் சமீபத்தில் பெங்களூர் சென்று அங்கு தான் பணிபுரிந்த பேருந்து பணிமனையில் உள்ள ஊழியர்களை சந்தித்தார். பின்னர் தனது பெற்றோர் நினைவு இடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

More News

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆர்எஸ் சிவாஜி காலமானதையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக

நீச்சல் குளத்தில் ஜாலியாக சமந்தா.. கலிபோர்னியா ஜாலி புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் நடித்த 'குஷி' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான்.. திருமண நாளில் ரவீந்தரின் நெகிழ்ச்சிப்பதிவு..!.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கடந்த ஆண்டு இதே நாளில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சூப்பர் அப்டேட்.. வைரல் புகைப்படம்.!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக கொடைக்கானலில் பிளாஷ்பேக்

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நயன்தாரா.. ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.