விஜய் கட்சிக்கு ஒரு அண்ணாமலையா? IRS பதவியை ராஜினாமா செய்து வந்தவருக்கு முக்கிய பதவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது போல, ஐஆர்எஸ் பதவியில் உள்ள ஒரு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்றும் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில், இந்த கட்சி 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ’ஜனநாயகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைய இருப்பதாகவும் விஜய்யை விரைவில் நேரில் சந்தித்து அவருடைய கட்சியில் இணைய கூடும் என கூறப்படுகிறது. விஜய் அவருக்கு என்ன பதவி கொடுப்பார்? அவரை தனது கட்சியில் எப்படி பயன்படுத்திக் கொள்வார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பாரதிய ஜனதாவிற்கு அண்ணாமலை இருந்ததுபோல், தமிழக வெற்றிக்கழகத்திற்கு அருண்ராஜ் இருப்பார் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு வழங்கப்படும் புதிய பதவி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com