ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் நாடு முழுவதற்கும் ஹிந்தி தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ’தமிழ் தான் இணைப்பு மொழி ’என செய்தியாளர்களிடம் கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது ’ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது போல் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் ஆங்கிலம் என்ற இரட்டை மொழிக் கொள்கை தான் இருக்கவேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழை பிரதமரே சுட்டிக்காட்டிப் பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறினார்.

அதேபோல் இதுகுறித்து அருணன் கூறியபோது, ‘தமிழணங்கு சித்திரத்தை வெளியிட்டதிலும், தமிழ்தான் இணைப்பு மொழி என்று கூறியதிலும் ஏஆர் ரஹ்மானின் சமூக உணர்வு வெளிப்பட்டுள்ளது என்றும், பல பிரபல கலைஞர்களும் எழுத்தாளர்களும் கனத்த மவுனம் காக்கும் போது இது உத்வேகம் தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

அஜித் படத்தில் கவின் இணைவது உண்மையா? படக்குழுவினர் விளக்கம்

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கும் 'அஜித் 61' படத்திலும் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'அஜித் 62' படத்திலும் கவின் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில்

சிம்புவிடம் இருந்து பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் யார்? ரன்னர் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. பாலாஜி, நிரூப், தாமரை மற்றும் ரம்யா பாண்டியன்

வங்கி கொள்ளைக்கு தயாரான அஜித்: இன்று முதல் 'அஜித் 61' படப்பிடிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

ரோல்ஸ்ராய் காரை ஓட்டிய தளபதி விஜய்: காரில் யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி

அமித்ஷாவின் இந்தி பேச்சுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மாஸ் பதில்!

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும்